Deepavali lehiyamLadduMathriMultinuts chikki

CLICK ON THE PICTURE FOR DIWALI SWEETS AND SAVOURIES

Friday, February 21, 2014

பழைய நினைவுகள் - பழைய காலத்து விளையாட்டுக்கள்

மறந்துபோன விளையாட்டுக்கள்,தெரு விளையாட்டு,பழைய காலத்து விளையாட்டுக்கள்,பாண்டிவிளையாட்டு, தாயக்கட்டை, பல்லாங்குழி. கோலிக்குண்டு, பம்பரம், நாலுமூலை, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய், கண்ணாமூச்சி, பச்சகுதிரை, டிரேட், கௌண்டிங் போர்டு, கிட்டிப்புள், சடுகுடு,அஞ்சு கல் விளையாட்டு, பரமபதம், நாலு சோழி, கோபீமிஸ், கோலாட்டம் , கும்மி, ஊதுகாய்,பச்சைக்குதிரை

பழைய நினைவுகள்.. காலம் மாறினாலும் பசுமையான நினைவுகள் நம்மை விட்டு நிச்சயம் அகலாது.

பழைய காலத்து விளையாட்டுக்களை மறக்க முடியுமா? எத்தனையெத்தனை!!! 


பாண்டி(ரைட்டா ரைட்டு), தாயக்கட்டை(வெட்டு படாமல் மலைக்கு ஏறணும்), பல்லாங்குழி.. இதில் சோழியைத் தொலைத்துவிட்டால் புளியங்கொட்டை தான். பெண்கள் ஆண்கள் அனைவரும் ஆடலாம். (கணித முறை விளையாட்டு,காசி தட்டிட்டேன், வழிச்சு எடுத்து ), கோலிக்குண்டு(குட்டினா எட்டு, குழி பூந்தா ஒம்பது), பம்பரம்(அபீட்), நாலுமூலை, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய், கண்ணாமூச்சி, பச்சகுதிரை(உயரம் கூடும். இது, ஆணும் பெண்ணும் சேர்ந்து விளையாட அனுமதி இல்லை), டிரேட்(ஜூஹூ, சௌபாதி), கௌண்டிங் போர்டு(100 விழுந்தா பெருமை, இதுவும் கணித முறை விளையாட்டு), கிட்டிப்புள்(கில்லி தாண்டல்), சடுகுடு (தோற்றவர்கள் ஜெயித்தவர்களை உப்பு மூட்டைதூக்க வேண்டும்), "ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம், ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்ததாம்" என்று ஒரு விளையாட்டு, 
அஞ்சு கல் விளையாட்டு(பெஸ்ட் அக்குபிரஷர்), பரமபதம் (ஏணியும் பாம்பும்) , நாலு சோழி (நாப்பது, மொக்கை), கோபீமிஸ், கோலாட்டம் , கும்மி, ஊதுகாய் (சிறந்த பிராணாயாமம். நிறைய புளியங்கொட்டை குவித்து வைத்து , ஊதி விட்டு, மற்ற காய் மேல கைபடாமல் எடுக்கணும்), சைக்கிள் ரவுண்ட் (சைக்கிள் கடைல ஒரு மணிநேரத்துக்கு 50 பைசா அல்லது 1 ரூபாய் என்று நினைக்கிறேன். சைக்கிள் வாடகைக்கு வாங்கி ஓட்டுவோம். சைட் ஸ்டாண்ட்,பெல், ப்ரேக் எதுவும் இருக்காது. 4 பேராக சேர்ந்து க்ரவுண்ட்க்கு போவோம். எத்தனை தடவை விழுந்தாலும் வலி என்று சொல்ல மாட்டோம். எப்படியாவது கற்றுக்கொள்ளவேண்டும் ஒரு வைராக்கியம். 

தெருவிளையாட்டில் கிடைத்த சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் இப்போது தொலைத்துவிட்டோம் என்றே தோன்றுகிறது.

2 comments:

  1. அருமை, அருமை, அருமை உண்மையிலேயே நான் என்னை எவ்வளவு தூரம் மறந்திருக்கிறேன் என்பதை உணர முடிந்தது. பழைய நினைவுகளில் கொண்டு சென்றதற்கு மிக்க மகிழ்ச்சி . நல்ல கட்டுரைகள் இருந்தால் எங்கள் மலையாள பத்திரிகைக்கு அனுப்பித் தாருங்கள். எங்கள் பதிவையும் வாசியுங்கள். நேசியுங்கள். thyagaseelanjms.blogspot.com தியாகசீலன் email. thyagaseelanjms@gmail.com

    ReplyDelete
  2. அருமை, அருமை, அருமை உண்மையிலேயே நான் என்னை எவ்வளவு தூரம் மறந்திருக்கிறேன் என்பதை உணர முடிந்தது. பழைய நினைவுகளில் கொண்டு சென்றதற்கு மிக்க மகிழ்ச்சி . நல்ல கட்டுரைகள் இருந்தால் எங்கள் மலையாள பத்திரிகைக்கு அனுப்பித் தாருங்கள். எங்கள் பதிவையும் வாசியுங்கள். நேசியுங்கள். thyagaseelanjms.blogspot.com தியாகசீலன் email.thyagaseelanjms@gmail.com

    ReplyDelete