Deepavali lehiyamLadduMathriMultinuts chikki

CLICK ON THE PICTURE FOR DIWALI SWEETS AND SAVOURIES

Monday, February 17, 2014

சைக்கிளாயணம்


என்னோட "சைக்கிளாயணம்" நடந்த இடம் கோவைதான். நன்னா ஞாபகம் இருக்கு. அதுவும் gents சைக்கிள்ள. பாவாடை கட்டிண்டு, gents சைக்கிள் ஓட்டும் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். பின்னாலே பிடிச்சுக்க ராஜு, தூரத்து உறவுப் பையன். ஒரே நாள்தான். கைய விட்டுட்டான். ஒரு கருவேல முள் புதரில் சைக்கிள் சாய, இவன் ஓடி விட்டான். நான் சைக்கிளைப் போட்டுக்கொண்டு விழுந்தேன். கை கால்களில் முள் குத்தி சிராய்ப்பு, ரத்தக் காயம். சைக்கிளை உருட்டிக்கொண்டு, அழுது கொண்டு வீட்டுக்கு வந்தேன். மனதில் ஒரு தீர்மானம். கூட யாரும் வேண்டாம், நாமே கத்துக்கலாம்ன்னு. கற்றுக்கொண்டு விட்டேன். வெற்றிதான். ஆனால் வீட்டில் இருந்தது gents சைக்கிள். ஹிந்தி கிளாஸ், டைப் கிளாஸ் எல்லாம் அதுலதான். அதுக்கும் ஒரு "வில்லன்". ஒரு நாள் குறுக்கே ஒரு கோழி. நான் புத்திசாலித்தனமாய், அது கடந்ததும், அந்த வழியில் சைக்கிளை ஒட்டினேன். இந்த கோழி இருக்கே , அதுக்கு என்றுமே குழப்பம்தான். பாதி வழி போயிட்டு, எதையோ மறந்த மாதிரி, திரும்பி வந்தது. அது மேல இடிக்காம இருக்க, நான் சைக்கிளை நிறுத்த முயல, gents சைக்கிள். பாவாடை. ரோடில் செல்பவர்கள் என் காலைப் பார்த்துவிடக்கூடாதே. (அவர்களுக்கு வேற வேலை இல்ல பாருங்க) .. வேறு என்ன, கீழே விழுந்தேன். அதிலிருந்து, எனக்கு கோழின்னாலே ஒரு phobia. அந்த phobia ஒரு வழியாய் நான் moped ஓட்டரச்சே "போயிந்தே,போயே போச்சு, இட்ஸ் கான்". ஆனா இன்னிக்கும் கோழியைப் பார்த்தால் அந்த "பாதியிலே எதையோ மறந்து போய்த் திரும்பி வந்த கோழி"தான் நினைவுக்கு வரும்.

No comments:

Post a Comment