"There is only one difference between dream and aim. Dream requires effortless sleep, whereas aim requires sleepless efforts".
Wednesday, August 14, 2013
கா...கா காக்கா
சின்ன வயசுல இருந்தே எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் என்றால் இதுதாங்க. பள்ளிக்கூடத்துல டீச்சர், மாஸ்டர் கிட்ட எல்லாரும் பிச்சு வெளாசுவாங்க, ஆனா எனக்கு இது வராது. வீட்லயும்,எனக்கு இது பழக்கமில்ல. சரி அதுக்கும் ஒரு திறமை வேணுமில்ல? வளர்ந்த பின்னாலயாவது பழகிக்கலாம்ன்னு பாத்தா, காலேஜுல, ஆபீசுல எங்கயும் எனக்கு பழகல. கடைசியா, "ஐந்தில் வராதது ஐம்பதில்" கிடைத்தது. தில்லைவிளாகம் ராமர் கோயிலில் இது அழகாக எனக்காகவே "போஸ்" கொடுக்க ஒரு வழியா எனக்கு கிடைத்த அவப்பெயரைத் துடைத்துப் பறந்து சென்றது. அட! இதத்தான் "காக்கா பிடிக்கறது"ன்னு சொல்வாங்களா? ;) :P
Subscribe to:
Post Comments (Atom)
Good one :D
ReplyDeleteமுதலில் புரியவில்லை.கடைசி வரியில் உங்களுடைய ஹாஸ்யம் என் முகத்தில் மெலிதான புன்முறுவலை கொண்டு வந்தது.மிக நன்றாக காக்காய் பிடித்து இருக்கிறீர்கள்
ReplyDeleteதாங்கள் காக்காப்பிடித்ததை விட அதை சொன்னவிதம் அழகோ அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅருமை, அருமை, அருமை உண்மையிலேயே நான் என்னை எவ்வளவு தூரம் மறந்திருக்கிறேன் என்பதை உணர முடிந்தது. பழைய நினைவுகளில் கொண்டு சென்றதற்கு மிக்க மகிழ்ச்சி . நல்ல கட்டுரைகள் இருந்தால் எங்கள் மலையாள பத்திரிகைக்கு அனுப்பித் தாருங்கள். எங்கள் பதிவையும் வாசியுங்கள். நேசியுங்கள். thyagaseelanjms.blogspot.com தியாகசீலன்
ReplyDelete