Deepavali lehiyamLadduMathriMultinuts chikki

CLICK ON THE PICTURE FOR DIWALI SWEETS AND SAVOURIES

Wednesday, August 14, 2013

கா...கா காக்கா

சின்ன வயசுல  இருந்தே எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் என்றால் இதுதாங்க. பள்ளிக்கூடத்துல டீச்சர், மாஸ்டர் கிட்ட எல்லாரும் பிச்சு வெளாசுவாங்க, ஆனா எனக்கு இது வராது. வீட்லயும்,எனக்கு இது பழக்கமில்ல. சரி அதுக்கும் ஒரு திறமை வேணுமில்ல? வளர்ந்த  பின்னாலயாவது பழகிக்கலாம்ன்னு பாத்தா, காலேஜுல, ஆபீசுல எங்கயும் எனக்கு பழகல.  கடைசியா, "ஐந்தில் வராதது ஐம்பதில்" கிடைத்தது. தில்லைவிளாகம் ராமர் கோயிலில் இது அழகாக எனக்காகவே "போஸ்" கொடுக்க ஒரு வழியா எனக்கு கிடைத்த அவப்பெயரைத் துடைத்துப் பறந்து சென்றது. அட! இதத்தான் "காக்கா பிடிக்கறது"ன்னு  சொல்வாங்களா? ;) :P